இளம் வீரர் கருண் நாயர் முச்சதம் விளாசி முத்திரை

சென்னை: மூன்றாவது போட்டி யிலேயே முச்சதம் அடித்து அனைத் துலக கிரிக்கெட் அரங்கில் தனது வருகையைப் பிரம்மாண்டமாக அறிவித்துள்ளார் 24 வயதான இந்திய வீரர் கருண் நாயர். இந்திய, இங்கிலாந்து அணி களுக்கிடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அனைத்துலக அரங்கில் அடியெடுத்து வைத்த வர்களுக்கெல்லாம் மறக்கமுடியாத தொடராக அமைந்திருக்கிறது. இங்கிலாந்து வீரர்கள் ஹசீப் ஹமீது, கீட்டன் ஜென்னிங்ஸ், லியம் டாசன் ஆகியோர் வரிசை யில் கருண் நாயருக்கும் இந்தத் தொடர் புதிய வெளிச்சத்தைத் தந்துள்ளது.

முந்தைய இரு போட்டிகளிலும் சேர்த்து 17 ஓட்டங்களை மட்டுமே எடுத்ததால் ஏமாற்றமடைந்த கருணுக்கு சென்னையில் நடந்து வரும் கடைசி, ஐந்தாவது ஆட்டம் அதிர்ஷ்டமிக்கதாக அமைந்தது. கருண் 381 பந்துகளை எதிர் கொண்டு 32 பவுண்டரிகள், நான்கு சிக்சர்களுடன் 303 ஓட் டங்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் சதமே முச்சதமாக அமைந்த வகையில் உலகின் மூன்றாவது ஆட்டக்காரர் இவர். அத்துடன், சேவாக்கிற்குப் பிறகு முச்சதம் அடித்த 2வது இந்தியரும் இவரே.

தனது முதலிரு போட்டிகளில் சோபிக்காதபோதும் அடுத்த போட்டியில் முச்சதம் அடித்து வரலாற்றில் இடம்பெற்ற இந்தியாவின் கருண் நாயர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!