புயலெனப் பாய்ந்த லிவர்பூல்

லிவர்பூல்: சொந்த அரங்கில் நடந்த ஆட்டத்தில் தொடக்கத் திலேயே கோலை விட்டுத் தந்த போதும் பின் பொங்கியெழுந்து நான்கு கோல்களைப் போட்டு ஸ்டோக் சிட்டி குழுவைத் திணற டித்தது லிவர்பூல் காற்பந்துக் குழு. இதன்மூலம் இந்தப் பருவத்தில் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் தன்னை அசைக்கமுடியாதபடி அக் குழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 4-1 என்ற கணக்கில் கிட்டிய இவ்வெற்றியின்மூலம் இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் மீண்டும் அக்குழு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. கடைசியாக ஆன்ஃபீல்ட் அரங்கில் ஸ்டோக் சிட்டியிடமே லிவர்பூல் தோற்றிருந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் லீக் கிண்ண அரையிறுதி முதல் சுற்று ஆட்டத் தில் 1-0 என்ற கோல் வித்தியா சத்தில் லிவர்பூலை வீழ்த்தியது ஸ்டோக் சிட்டி. நேற்றைய ஆட்டத்தின் 12ஆம் நிமிடத்திலேயே கோலடித்து முன் னிலை பெற்றதால் மீண்டும் ஒருமுறை ஸ்டோக் சிட்டியிடம் லிவர்பூல் மண்ணைக் கவ்வுமோ என்று அரங்கில் திரண்டிருந்த 53,000 ரசிகர்களின் முகங்களிலும் சோகம் தொற்றியது.

ஸ்டோக் சிட்டி குழுவிற்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூல் குழுவின் முதல் கோலை அடிக்கும் லிவர்பூல் ஆட்டக்காரர் ஆடம் லலானா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!