சாதனை அணித் தலைவர் டோனிக்குக் குவிந்த புகழாரங்கள்

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து டோனி (படம்) திடீரென விலகியுள்ளார். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து அவருக்கு புகழாரங்கள் குவிந்துள்ளன.

நரேந்திர மோடி: டோனியின் எதிர்கால இலக்குகளுக்கு எனது வாழ்த்துகள். அணித் தலைவராக இருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அவரிடம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சச்சின் டெண்டுல்கர்: இந்தி யாவுக்காக ஒருநாள், டி20 உலகக் கிண்ணங்களை வென்ற அணித் தலைவர் டோனிக்கு என் வாழ்த்துகள். ஓர் அதிரடி வீரர் என்ற நிலையிலிருந்து நிதானமும் உறுதியும் மிக்க ஓர் அணித் தலைவராக அவர் மாறியதை நான் பார்த்தவன். பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்த அவரது தலைமைத்துவத்தைக் கொண்டாடும் நேரம் இது. அணித் தலைவர் பதவியிலிருந்து விலக அவர் எடுத் துள்ள முடிவை நாம் மதிக்கவேண்டும்.

ஹார்திக் பாண்டியா: லட்சக் கணக்கானோருக்கு டோனி ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார். அவரது தலைமையின்கீழ் நான் ஆடிய ஒவ்வொரு வினாடியும் விலைமதிக்க முடியாதவை.

சுரேஷ் ரெய்னா: டோனி இந்திய அணியின் வெற்றித் தலைவர். கனவுகள் நிறைவேறலாம் என்று அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்தன.

மைக்கல் வான்: டோனி உண்மையிலேயே ஈடு இணையற்ற கிரிக்கெட் அணித் தலைவர். அவருக்கு எனது வாழ்த்துகள்.

ரோகித் சர்மா: உண்மையான வழிகாட்டி, தலைவர், நிறைய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை யில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இர்ஃபான் பதான்: அணித் தலைவராக அவரது வழிமுறையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

ஹர்ஷா போக்ளே: ஓர் அருமையான வீரருக்கு கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவிக்க வேண்டிய நேரம் இது. டோனி மீது இந்தப் பாராட்டு மழை பொழிய அவரது சாதனைகளே காரணம். அவற்றுள் சிலவற்றை சற்று பார்க்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!