தோற்று வெளியேறிய லிவர்பூல்

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் லிவர்பூல் குழு தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது. இரண்டாவது நிலை லீக்கில் விளையாடும் உல்வர்ஹேம்டன் வன்டரர்ஸ் அணியிடம் சொந்த மண்ணில் விளையாடிய லிவர்பூல் 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்ந்தது. ஏழு முறை எஃப்ஏ கிண் ணத்தை வென்றுள்ள லிவர்பூல் இம்முறை நான்காவது சுற்றிலேயே வெளியேறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

அண்மையில் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான இறுதி ஆட்டத்துக்கும் லிவர்பூல் தகுதி பெறத் தவறியது. அரையிறுதியில் அது ஒட்டுமொத்த கோல் அடிப் படையில் சவுதாம்டனிடம் 2-0 எனும் கோல் கணக்கில் தோற்றது. லீக் போட்டியிலும் லிவர்பூல் கடுமையான சவாலை எதிர் நோக்கி வருகிறது. பட்டியலில் முன்னிலை வகிக்கும் செல்சியை விட அது பத்து புள்ளிகள் குறை வாகப் பெற்றுள்ளது. அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்திருக்கும் லிவர்பூல் அதன் அடுத்த லீக் ஆட்டத்தில் வலிமைமிக்க செல்சியை நாளை சந்திக்கிறது.

இந்த ஆட்டம் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கத்தில் நடைபெறு கிறது. உல்வ்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டம் தொடங்கி 53வது நிமிடத்திலேயே லிவர்பூல் பின்னடைவைச் சந்தித்தது. ஃப்ரீ கிக் மூலம் வந்த பந்தை உல்வ்ஸ் குழுவின் ரிச்சர்ட் ஸ்டியர்மன் தலையால் முட்டி வலைக்குள் சேர்த்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!