‘நடுவரால் பறிபோன வெற்றி’

நாக்பூர்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஐந்து ஓட்டங்களில் வென்றது. இதையடுத்து, மூன்று போட் டிகள் கொண்ட தொடர் 1-1 எனச் சமநிலையை எட்டியது. முதலில் பந்தடித்த இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக் கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 71 ஓட்டங்களை விளாசினார். மனிஷ் பாண்டே 30, அணித்தலைவர் கோஹ்லி 21 ஓட்டங்களை எடுத் தனர்.

அடுத்து நிதானமாகப் பந்த டித்த இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் எட்டு ஓட்டங்களை எடுத் தால் வெற்றி என்ற நிலையில் இரண்டு ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. ஜஸ்பிரீத் பும்ரா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட் 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்து மட்டையில் பட்டு, பின் அவரது காலில் பட்ட போதும் 'எல்பிடபிள்யூ' முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித் தார். இதுவே ஆட்டத்தைத் திசை திருப்புவதாக அமைந்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயை வீழ்த்திய ஆ‌ஷிஷ் நெஹ்ராவை (நடுவில்) பாராட்டும் இந்திய அணித்தலைவர் கோஹ்லியும் (வலது) சக வீரர்களும். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!