டி20: 72 பந்தில் 300 ஓட்டங்கள் குவித்து சாதித்த 21 வயது வீரர்

புதுடெல்லி: டெல்லியில் கிளப் அணி­களுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் மாவி லெவன் - பிரென்ட்ஸ் லெவன் அணிகளுக்கு இடையி லான போட்டியில் மாவி லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரராக பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பரும் ஆன டெல்லியைச் சேர்ந்த 21 வயது மோகித் அலாவத் களம் இறங்கினார். தொடக்கம் முதலே பிரென்ட்ஸ் லெவன் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக் கும் பறக்க விட்டார். இதனால் 18 ஓவருக்குள் 250 ஓட்டத்தைத் தொட்டார்.

கடைசி இரண்டு ஓவரில் 50 ஓட்டங்கள் சேர்த்ததன் மூலம் 20 ஒவர்கள் முடிவில் 72 பந்தில் 300 ஓட்டங்கள் குவித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். இதில் 39 சிக்ஸ், 14 பவுண்டரிகள் அடங்கும். கடைசி ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸ் விளாசி மோகித், கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 34 ஓட்டங்கள் சேர்த்தார்.2017-02-09 06:00:00 +0800

டெல்லியைச் சேர்ந்த மோகித் அலாவத். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!