முரளி விஜய் சதம்

இந்தியா - பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று ஹைதராபாத்தில் தொடங்கி யது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முதல் ஓவரின் 4வது பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் தஸ்கின் அகமது வீசிய பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி யது. இருவரும் அரைசதம் கடந்து விளையாடினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 180 ரன்னாக இருக்கும்போது புஜாரா 83 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து முரளி விஜய் உடன் கோலி ஜோடி சேர்ந்தார். மதிய தேநீர் இடை வேளையின் போது முரளி விஜய் 99 ஓட்டங்கள் எடுத்திருந்தார். தேநீர் இடைவேளை முடிந்து வந்தவுடன் சதம் அடித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!