சொந்தத் திடலில் ஆண்டின் முதல் வெற்றியை லெஸ்டர் பதிவு

நேற்று அதிகாலை லெஸ்டர் சிட்டியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற எஃப்ஏ கிண்ணப் போட்டி ஒன்றில் டார்பி கவுண்டி குழுவை எதிர்கொண்ட லெஸ்டர் தனது மைதானத்தில் இவ் வாண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் லெஸ்டர் சிட்டியின் டெமாராய் கிரே என்ற வீரர் தனி ஒருவராக பல டார்பி கவுண்டி வீரர்களைத் தாண்டி கோல் போட்டு லெஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார். சென்ற வாரக் கடைசியில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடனான ஆட்டத்தில் விளையாடிய வீரர்களில் சிலரை மாற்றி குழுவை களமிறக்கியது லெஸ்டர் சிட்டி. இதில் லெஸ்டருக்கான முதல் கோலை ஆண்டி கிங் ஆட்டத்தின் 46ஆம் நிமிடத்தில் போட, 61ஆம் நிமிடத்தில் டார்பி கவுண்டியின் கமாரா பதிலுக்கு ஒரு கோல் போட்டு சமநிலையை ஏற்படுத்தி னார். பின்னர், கூடுதல் நேரத்தில் லெஸ்டரின் வில்ஃபரட் நடிடி ஒரு கோல் போட ஆட்டத்தின் 114 நிமிடத்தில் கிரே போட்ட அற்புதமான கோலால் லெஸ்டர் 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றியை உறுதி செய்து கொண்டு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

டார்பி கவுண்டி - லெஸ்டர் சிட்டி அணிகளுக்கிடையிலான போட்டியில் லெஸ்டருக்காக கோல் புகுத்தி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்த டெமாராய். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!