மீண்டும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தார் டெண்டுல்கர்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் டெல்லி மேலவை நாடாளுமன்ற உறுப்- பின ராக உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருக்- கான உள்ளூர்ப் பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வசதியில் பின்தங்கிய கிராமத்- தைத் தத்தெடுத்து அடிப்படை வசதிகளை அரசின் உதவி- யுடன் செய்து கொடுத்து வருகிறார். ஆந்திராவில் உள்ள புட்டம்ராஜூ கான்ட்ரிகா கிராமத் தைத் தத்தெடுத்து டெண்டுல் கர் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்துகொடுத்தார். இந்த நிலையில் டெண்டுல்கர், மகாராஷ்டிர மாநிலத்தின் ஒஸ்மான்பாத் மாவட் டத் தில் உள்ள டொஞ்சா என்ற கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார்.

அந்தக் கிராமத்தில் பள்ளிக் கூடம், குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக டெண்டுல்கர் உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

தத்தெடுக்கப்பட்ட டொஞ்சா கிராம மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் டெண்டுல்கர். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!