கடைசி பந்தில் கைசேர்ந்த வெற்றி

மெல்பர்ன்: முன்னணி வீரர்கள் சிலர் இந்தியா சென்றுள்ள நிலையில் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, உபுல் தரங்கா தலைமையிலான இலங்கை அணியுடன் மூன்று டி20 ஆட்டங்களில் மோதுகிறது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களை எடுத்தது. இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு டிக்வெல்லா (30), முனவீரா (44), குணரத்ன (52) ஆகியோர் கைகொடுத்தனர். கடைசி பந்தில் ஓர் ஓட்டம் தேவைப்பட, பவுண்டரி அடித்து இலங்கை அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார் கபுகெடேரா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!