இரு தரப்பிற்கும் வாய்ப்பு

பெங்களூரு: ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடை யிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுக்குமே சம வாய்ப்பு நிலவுகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸி. அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய 2வது ஆட்டத்தின் முதல் இன்னிங்சிலும் அவ்வணியே ஆதிக்கம் செலுத்தியது. சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் எட்டு விக்கெட்டுகளைச் சாய்க்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அதைத் தொடர்ந்து பந்தடித்த ஆஸி. அணி இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களை எடுத்திருந்தது.

ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் பந்துவீச்சில் 'ஸ்டம்ப்'பைப் பறிகொடுத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!