சிறப்பாக ஆடுவது கடினம் - மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி

மாஸ்கோ: யூரோப்பா லீக் தொடரின் காலிறுதிக்கு முந்திய சுற்று முதல் ஆட்டத்தில் மான் செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு 1-1 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவின் ரோஸ்டோவ் குழுவுடன் சமன் கண்டது. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் யுனைடெட் குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்லாட்டன் இப்ராகி மோவிச் கடத்தித் தந்த பந்தை கோல் பகுதிக்கு மிக அருகில் இருந்து வலைக்குள் தள்ளினார் ஹென்ரிக் மகிதார்யான். இருப் பினும், அலெக்சாண்டர் புகாரோவ் 59வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் ஆட்டத்தைச் சமன்படுத் தியது ரோஸ்டோவ். அதன்பிறகு ரோஸ்டோவின் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருந்தது. ஆயினும், அக்குழுவால் மேலும் கோல் போட முடியவில்லை.

ஆட்டத்தின் முதல் கோலை அடித்து யுனைடெட்டுக்கு முன்னிலை பெற்றுத் தந்த மகிதார்யான் (இடமிருந்து 3வது). படம்: ராய்ட்டர்ஸ்

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!