மூன்று வாரங்களுக்கு போக்பா ஆட முடியாது

மான்செஸ்டர்: யூரோப்பா லீக் காற்பந்துத் தொடரின் காலிறு திக்கு முந்திய சுற்று இரண்டாவது ஆட்டத்தில் 70வது நிமிடத்தில் யுவான் மாட்டா அடித்த ஒரே கோலால் ரஷ்யாவின் ரோஸ்டோவ் குழுவை 1-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் குழு தோற்கடித்தது. இவ்விரு குழுக்களுக்கு இடையிலான முதல் ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்தது. இதனால் ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 2-1 என முன் னிலை பெற்ற யுனைடெட் குழு காலிறுதிக்குத் தகுதி பெற்றது. இருப்பினும், யுனைடெட் குழுவால் இந்தப் பருவத்தின் தொடக்கத்தில் 89.5 மில்லியன் பவுண்டு விலைகொடுத்து வாங் கப்பட்ட பிரெஞ்சு ஆட்டக்காரர் பால் போக்பா 48வது நிமிடத்தில் பின்தொடைத் தசைநாரில் காயம் அடைந்து வெளியேறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!