இந்திய ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்திய ஆஸி.

ராஞ்சி: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஓட்ட எண்ணிக் கையை உயர்த்த இலக்கு கொண் டிருந்த இந்திய அணிக்கு வேகத் தடை போட்டது ஆஸ்திரேலியா. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியாவின் அபாரப் பந்துவீச்சால் இந்தியா ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், அதிரடியாகப் பந்தடித்த சேத்தேஸ்வர் புஜாராவை ஆஸ்திரேலியாவால் ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் போனது. ஆட்ட முடிவில் அவர் 130 ஓட்டங்கள் எடுத்து தொடர்ந்து களத்தில் உள்ளார். மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 451 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா, நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 120 ஓட்டங்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 42 ஓட்டங்களுடனும் புஜாரா 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர் அனுப்பிய பந்தைப் புயல் வேகத்தில் பறக்கவிடும் இந்தியாவின் சேத்தேஸ்வர் புஜாரா (வலது). பந்தைப் பிடித்து புஜாராவை ஆட்டமிழக்கச் செய்ய ஆவலுடன் காத்திருந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!