வெற்றி தோல்வியின்றி முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி

ராஞ்சி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல் வியின்றி 'டிரா'வில் முடிந்தது. நேற்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலியா வின் ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் இருவரும் நிலைத்து நின்று ஆடி போட்டியை 'டிரா'வில் முடித்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு ஒன்று சேர்ந்த இவர்கள், 124 ஓட்டங்களைக் குவித்தனர். இன்னிங்சின் தொடக்கத்தில் ஆஸி. விக்கெட்டுகளை கைப்பற் றிய இந்தியாவால் ஆஸ்திரேலியா வின் நடுவரிசை விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. நேற்றைய ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 204 ஓட்டங் களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நான்காவது நாள் ஆட்டத்தில் வார்னரையும் லயனையும் வீழ்த்திய இந்திய அணி நேற்றைய ஆட்டத் தின் தொடக்கத்திலேயே ஆஸி. அணியின் நம்பிக்கை நட்சத்திர மான ஸ்மித்தின் விக்கெட்டை கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித்தின் (வலது) விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய அணியினர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!