மான்செஸ்டர் யுனைடெட்: இப்பருவத்தின் சிறந்த ஆட்டமாக இருக்கும்

மான்செஸ்டர்: தம்முடைய பரம எதிரியான மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலாவை வென்று பழிதீர்க்க மான்செஸ்டர் யுனை டெட் குழு நிர்வாகி ஜோசே மொரின்யோவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சிட்டியின் எட்டிஹாட் அரங்கில் சிங்கப்பூர் நேரப்படி நாளை அதி காலை 3 மணிக்கு நடக்கவுள்ள இபிஎல் ஆட்டத்தில் சிட்டி - யுனைடெட் குழுக்கள் மோதவிருக் கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இவ்விரு குழுக்களும் பொருதிய ஆட்டத்தில் சிட்டி 2-1 என்ற கோல் கணக்கில் யுனைடெட்டை வீழ்த்தி இருந்தது.

ஆனாலும், எஃப்ஏ கிண்ண அரையிறுதியில் ஆர்சனலிடம் சிட்டி தோல்வி கண்டதால், கார்டியோலாவால் இந்தப் பருவத் தில் ஒரு கிண்ணம்கூட வெல்ல முடியாமல் போனது. ஒரு நிர்வாகி யாக, அவருக்கு இப்படி நடந்திருப் பது இதுவே முதன்முறை. இந்நிலையில், இன்று சொந்த அரங்கில் யுனைடெட்டிடம் தோற் கும் பட்சத்தில் சிட்டி குழு முதல் நான்கு நிலைகளுக்குள் வர முடி யாமல் போனால் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பையும் இழக்க நேரிடும். இதனிடையே, மான்செஸ்டர் குழுக்களுக்கு இடையிலான நாளைய ஆட்டம் இந்தப் பருவத் தின் சிறந்த ஆட்டமாக அமையும் எனக் கருத்துரைத்துள்ளார் யுனை டெட் வீரர் ஆண்டர் ஹெரேரா.

"உண்மையில், இது வாழ்வா சாவா ஆட்டம்தான். நாங்கள் சிட்டியைவிட ஒரு புள்ளி குறை வாகப் பெற்றுள்ளோம். நாங்கள் வென்றால் முதல் நான்கு நிலை களுக்குள் முடிக்க எங்களுக்கு நல்ல வாய்ப்பு. தோற்றால் சிக்கல் தான்," என்றார் ஹெரேரா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!