விடாது துரத்தும் ஸ்பர்ஸ்

லண்டன்: முதலிடத்தில் இருக்கும் செல்சி குழுவைவிட நான்கு புள்ளிகள் பின்தங்கியிருந்தாலும் நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தைத் தன்னால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் விளையாடி வருகிறது இரண்டாம் இடத்தில் இருக்கும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழு. தனது முந்தைய ஆட்டங்களில் செல்சி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய முன்னணிக் குழுக்களை மண்கவ்வச் செய்த கிரிஸ்டல் பேலசை அதன் சொந்த மண்ணி லேயே ஸ்பர்ஸ் குழு நேற்று எதிர்கொண்டது. முற்பாதி ஆட்டம் கோலேதும் இன்றி முடிந்தபோதும் 78வது நிமி டத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் வெகு தூரத்தில் இருந்து போட்ட அருமையான கோல் ஸ்பர்சுக்கு வெற்றி தேடித் தந்தது. பதில் கோலடித்து ஆட்டத்தைச் சமன் செய்ய பேலஸ் குழுவினர் போரா டியபோதும் பலன் கிட்டவில்லை. இதன்மூலம் ஸ்பர்ஸ் குழு தான் கடைசியாக ஆடிய எட்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கிரிஸ்டல் பேலஸ் குழு வீரர் லூக்கா மிலிவோயெவிச்சுடன் (வலது) பந்துக்குப் போராடும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் ஆட்டக்காரர் ஹேரி கேன். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!