காற்பந்துச் சங்க நிர்வாகிகளுக்கு வலியுறுத்து

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் புதிய தலைவர்களாக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்கள் அனை வரது கருத்துகளையும் கேட்டு, கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ‘ஸ்போர்ட்எஸ்ஜி’ அமைப் பின் தலைவர் லிம் டெக் யின் வலியுறுத்தி இருக்கிறார். ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் மரத்தான் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு லிம், “ஒவ்வொருவருக்கும் ஒரு கண் ணோட்டம் இருக்கலாம்.

அப்படி வேறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டிருக்க அவர்களுக்கு உரிமை உண்டு,” என்றார். “அத்தகைய பல வேறுபட்ட கருத்துகளையும் காற்பந்துச் சங் கத்தின் புதிய நிர்வாகிகள் மிகவும் கவனமாகக் கேட்கவேண்டும் என நான் கருதுகிறேன். காற்பந்து ரசிகர்கள், காற்பந்துக் குழுக்கள் என பரந்த சமூகத்திற்குச் சேவை ஆற்றும் வகையில் புதிய உத்தி களையும் திட்டங்களையும் அவர் கள் வகுக்கவேண்டும். அதேபோல, வலுவான தேசிய குழுவை உரு வாக்கவும் அவர்கள் ஒரு நீடித்த திட்டத்தை வகுக்கவேண்டும். அதற்கு அடிப்படையாக, பலதரப் பட்ட கருத்துகளையும் கவனமாகக் கேட்டறிந்து, நல்ல முடிவுகளை எடுக்கவேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.