சிரியா விமான நிலையத்திற்கு அருகே மிகப்பெரிய வெடிப்பு

டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அனைத் துலக விமான நிலையத்திற்கு அருகே நேற்று மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெருமளவில் தீ மூண்டதாக தகவல்கள் கூறின. டமாஸ்கஸ் விமான நிலையத் திற்கு வெளியில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்ட றியப்படவில்லை என்றும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. விமானத் தாக்குதல் காரண மா? அல்லது தரைப் படைத் தாக்குதலா? என்பது உடனடி யாகத் தெரியவில்லை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள், டமாஸ்கஸ் விமான நிலையத்தின் மீதும் மற்ற விமானத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந் துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!