நெருக்கடி கொடுக்கும் ஸ்பர்ஸ்

டோட்டன்ஹம்: ஆர்சனலை வீழ்த் திய டோட்டன்ஹம்மின் வெற்றி, இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற் பந்துத் தொடரை வெல்ல நினைக் கும் செல்சிக்கு தொடரும் நெருக் கடியாகவே கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 1994=95ஆம் ஆண்டிற்குப் பிறகு, முதல்முறையாக தனது பரம எதிரி யான ஆர்சனலைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர். எவர்ட்டனை 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்ற பிறகு, தரவரிசையில் முதலிடத்திற்கான போட்டியின் பின்னணியில், விளையாடிய ஸ்பர்ஸ் குழு 2-0 என ஆர்சனலை வீழ்த்தியது.

இதன் மூலம், தற்போதைய பருவத்தில் தனது ஒன்பதாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்து உள்ளது ஸ்பர்ஸ். கடந்த அக் டோபர் மாதம் 1960ஆம் ஆண்டு 13 தொடர் வெற்றிகளைப் பதிவு செய்திருந்து ஸ்பர்ஸ். நேற்றைய போட்டியில் முற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. பிற்பாதியில் டெலி அலி இப்பருவத்திற்கான தனது 21வது கோலைப் புகுத்தினார். 55வது நிமிடத்தில் விழுந்த அந்தக் கோல் ஸ்பர்ஸ் குழுவின் முதல் கோலாக அமைந்தது.

பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்பர்ஸ் குழுவுக்கான இரண்டாவது கோலை ஹேரி கேன் புகுத்தினார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!