மொனாக்கோ கனவை தகர்த்த ஹிகுவெய்ன்

மொனாக்கோ: மொனாக் கோவில் நேற்று அதி காலை நடைபெற்ற சாம்பி யன்ஸ் லீக் அரை யிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் யுவென்டசை எதிர்கொண்ட மொனாக்கோ குழு 0-2 என்ற கோல் எண்ணிக்கையில் தோல் வியைத் தழுவியது. வலுவான தற்காப்பு அணியுடன் களமிறங்கிய யுவென்டஸ் குழு ஹிகு வெய்ன் மூலம் இரண்டு கோல்கள் போட்டு மொனாக்கோவை வீழ்த்தியது. இத்தனைக்கும் இதற்கு சாம்பியன்ஸ் லீக் தகுதியிழப்பு சுற்று ஆட்டங்களில் ஏழு காற் பந்து பருவங்களாக கோல் போடாதவர் ஹிகு வெய்ன் என்பது குறிப்பி டத்தக்கது. ஆனால், ஆட்டத்தை என்னவோ மொனாக்கோ தான் சுறுசுறுப்பாக தொடங் கியது.

மொனாக்கோவின் ஸ்டேட் லுயி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மொனாக்கோவுக்கு எதிரான கோலை போடும் ஹிகுவெய்ன் (இடக்கோடி எண் 9 சீருடையில்). படம்: ஏஎஃப்பி