உள்ளூர்க் காற்பந்தைச் சீரமைக்கும் பணி தொடங்கியது

ப. பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தேர்தல் முடிந்து இரு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கு முன்னரே 'டீம் எல்- கேட்டி' உள்ளூர்க் காற்பந்தைச் சீரமைக்- கும் பணி யில் இறங்கிவிட்டது என்று சொன் னார் தேர்தலில் வென்ற திரு செ.தவநேசன். 1976லிருந்து உள்ளூர்க் காற்பந்து விவகாரங்களில் ஈடுபட்டு வரும் திரு தவநேசன் தேசிய காற்பந்துக் குழுவின் ஏற்றத் தாழ்வுகளை நன்கு அறிந்தவர். ஃபிஃபா (FIFA) அமைப்பின் உலக காற்பந்துக் குழுக்களின் தரவரிசையில் 1993ல் சிங்கப்பூர் 75வது இடத்தை வகித்- தது. இன்று 160வது இடத்திற்கு சிங்- கப்பூர் காற்பந்துக் குழு வீழ்ச்சி கண்டுள்- ளது. இது மனதை உறுத்துகிறது எனக் கூறிய திரு தவநேசன், "மாற்றம் இப்போது அவசியமாகி றது. அக்கம்பக்க நாடுகளின் காற்பந்துக் குழுக்களின் சராசரி வயது 22 அல்லது 23 என இருக்க, சிங்கப்பூர் குழு தொடர்ந்து முதிய விளையாட்டாளர்- களையே நம்பியிருக்கிறது. குழுவிற்கு புதிய இளம் ரத்தம் தேவைப்படுகிறது," எனத் தற்போதைய நிலவரத்தை விளக்- கினார் அவர்.

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவின் உதவித் தலைவர்களில் ஒருவர், பாலஸ்டியர் கல்சா காற்பந்துக் குழுவின் தலைவர், 'ஸ்போர்ட்ஸ் இகியூப்மென்ட்ஸ் ஹோல்டிங்ஸ்' நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி எனப் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளார் திரு செ.தவநேசன் (இடது). அருகே சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் புதிய தலைவர் திரு லிம் கியா டோங், துணைத் தலைவர் திரு பெர்னார்ட் டான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!