ஆசிய மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் பஜ்ரங்

டெல்லி: ஆசிய மல்யுத்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் பிரிவில் இந்தியாவின் சரிதா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். டெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 3-2 என்ற கணக்கில் கொரியாவின் குக்வவாங் கிம்மை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி னார். இறுதிப் போட்டியில் அவர், கொரியாவின் லீயுடன் மோதி னார். இதில் பஜ்ரங் பூனியா 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 58 கிலோ எடைப் பிரிவு கால் இறுதியில் இந்திய வீராங்கனை சரிதா 10-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ் தானின் ஷெடமடோவாவை வீழ்த்தினார்.

தங்கப் பதக்கம் வென்ற பஜ்ரங். கோப்புப் படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!