இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் பட்டியலின் முதல் நான்கு இடங் களில் முடிக்கும் குழுக்கள் பிரசித்திபெற்ற ஐரோப்பிய சாம்பி யன்ஸ் லீக் போட்டிகளுக்குத் தகுதி பெறும். பருவம் முடிவதற்குப் பெரும் பாலான குழுக்களுக்கு இன்னும் இரு ஆட்டங்கள் மிஞ்சி இருக்க, நான்காம் இடத்திற்கான போட்டி சூடுபிடித்துள்ளது. ஸ்டோக் சிட்டியின் சொந்த அரங்கிற்கு நேற்று முன்தினம் ஆர்சனல் குழு சென்றிருந்தபோது, நான்காம் இடத்தை விரட்டிப் பிடிப்பதில் குறியாய் இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆர்சனலின் மொன்ரியால் தலை யால் முட்டிய கோல் முயற்சி எதிரணியின் கோல் கம்பத்தின் மேல் பட்டது வெறும் எச்சரிக்கையே. முதல் பாதியின் இறுதிக் கட்டத்தில், ஆர்சனலின் முன் னணி ஆட்டக்காரர் ஒலிவியே ஜிரூ அடித்த முதல் கோல் குழுவுக்கு நம்பிக்கை அளித்தது. இரண்டாம் பாதியில் ஆர்சன லின் சான்செஸ் பெனால்ட்டி எல்லைக்கு அனுப்பிய பந்தை அற்புதமாக வலைக்குள் புகுத் தினார் ஒசில்.

ஆட்டம் முழுவதும் ஆர்சனலின் நட்சத்திர ஆட்டக்காரரான அலெக்சிஸ் சான்செஸை (நடுவில்) தடுப்பது ஸ்டோக் சிட்டி விளையாட்டாளர்களுக்கு பெரும்பாடு. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!