இந்தியா - பாக். இறுதிப்போட்டி: ரூ.2,000 கோடிக்கு சூதாட்டம்

லண்டன்: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தையொட்டி ரூ.2,000 கோடி அளவுக்குச் சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மோதுகின்றன. வெற்றியாளர் கிண்ண இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் இன்று பலப் பரிட்சை நடத்த உள்ளதை உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர் பார்த்துக் காத்துக்கிடக் கிறார் கள். இதையடுத்துச் சூதாட்ட தரகர்- களும் முழு வீச்சில் தங்கள் வியாபாரத்தை பெருக்கி வருகி- றார்கள். இது தொடர்பான செய்தி இன்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. பெட்டிங் தரகர்கள் இந்தியா- தான் வெற்றி பெறும் எனக் கருதுகிறார்கள்.

எனவே இந்தியா வெற்றி பெறும் எனப் பெட்டிங் கட்டு- வோருக்கு 100 ரூபாய்க்கு ரூ.147 தான் பரிசு தொகையாக கிடைக்கு- மாம். அதுவே, பாகிஸ்தான் வெற்றி பெறும் எனப் பெட்டிங் கட்டு- வோருக்கு 100 ரூபாய்க்கு, 300 ரூபாய் பரிசாக கொடுக்கப்படுமாம். எனவே பெரும்பாலானோர் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் எனப் பந்தயம் கட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறு அதிகம் பேர் பெட் கட்டினால், இந்தியாவை வெற்றிபெறச் செய்ய சூதாட்ட தரகர்கள் கோல்மால்கள் செய்ய முயல்வர். இந்தியா மீது அதிகம் பேர் பெட் கட்டினால், பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்ய தங்கள் தந்திரங் களைப் பயன்படுத்துவர். அவ்வாறு செய்வதுதான் தரகர்- களுக்கு லாபம் என்பது காரணம். சுமார் ரூ.2000 கோடி அளவுக்- குச் சூதாட்டங்கள் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப் பட்டுள்ளனர்.