சுடச் சுடச் செய்திகள்

டோனி சாதனையை சமன் செய்வாரா கோஹ்லி?

லண்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்- தானுக் கும் இடையிலான இன்றைய இறுதிப் போட்டியைக் கண்டு- களிக்க இரு நாட்டு ரசிகர் களும் தடபுடலாக தயாராகி வரு- கின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் கேப் டன் கோஹ்லி மற்றும் விக்கெட் கீப்பர் டோனி இடையே ஒரு சிறு போட்டி நடந்து கொண்டுள்ளது. டோனி செய்த சாதனையை சமன் செய்வாரா கோஹ்லி என்பதுதான் அந்தக் குட்டிப் போட்டி. இதைக் காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந் தியா பாகிஸ்தான் போட்டி என்- றாலே வாணவேடிக்கைதான். இறு- திப் போட்டி என்றால் சொல்லவா வேண்டும். மீண்டும் ஒரு இறுதிப் போட்டி யில் இந்தியாவும் பாகிஸ் தானும் மோதுகின்றன.

மிக நீண்ட இடை வெளிக்குப் பிறகு காணக் கிடைக்காத ஒரு காட்சி. இதைக் கண்டு களிக்க இரு நாட்டு ரசிகர்களும் உலகம் முழுவதும் ஆயத்தமாகி வருகின்றனர். எல்லோருக்கும் இது ஒரு இறுதி ஆட்டம் என்றால் கோஹ்- லிக்கு இது வரலாறு படைக்க கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாகும். அந்த வரலாற்றை இன்று அவர் படைப்பாரா என்று கோஹ்லி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். கோஹ்லியைப் பொறுத்தவரை கேப்டனாக அவருக்கு இது முதல் ஐசிசி இறுதிப்போட்டி. இதில் இந்தியா வென்றால் கோஹ்லிக்குத் தனிப்பட்ட முறையில் அது வரலாறாக மாறும். இதே பாகிஸ்தானுக்கு எதிராக 2007ம் ஆண்டு நடந்த டுவென்டி 20 உலக கிண்ண இறுதிப்போட் டியில் டோனி தலைமையில் இந்- தியா வெற்றி பெற்றது. அது டோனிக்கு கேப்டனாக முதல் ஐசிசி இறுதிப் போட்டியாகும். அதேபோலவே நாளை நடைபெறும் இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா, கோஹ்லிக்குக் கேப்ட- னாக இது முதல் ஐசிசி இறுதிப் போட்டி. எனவே டோனியைப் போலவே கோஹ்லியும் சாதனை படைப்பாரா என்ற பெரும் எதிர் பார்ப்பு நிலவுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon