இந்தியா-பாக். நேரடி கிரிக்கெட் கிடையாது

புதுடெல்லி: இந்தியா=பாகிஸ் தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். இந்திய=பாகிஸ்தான் எல் லைக்கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தீவிரவாகள் ஊடுருவலுக்குத் துணை புரி கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. எனவே, எல்லை கடந்த தீவிரவாதத் தாக்குதல் நிறுத்தப் படும் வரை இந்தியா - பாகிஸ் தான் அணிகளுக்கு இடையில் நேரடி கிரிக்கெட் தொடர் நடைபெறாது என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற வேண்டுமென்றால் மத்திய அர சின் முடிவைப் பெறுவது கட்டாயம். பிசிசிஐ மத்திய அரசிடம் பலமுறை அனுமதி கேட்டது. ஆனால், மத்திய அரசு திட்டவட்டமாக அதை நிராகரித்து விட்டது. இந்நிலையில் அமித் ஷாவிடம், இந்திய - பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமித் ஷா பதிலளிக் கையில் “அனைத்துலகத் தொடர் களில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும். ஆனால், இந்தியா பாகிஸ்தான் மண் ணிலோ, பாகிஸ்தான் இந்திய மண்ணிலோ விளையாடாது’’ என்றார். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி