கோஹ்லி: பாகிஸ்தான் வெற்றி இந்தியாவுக்கு நல்ல பாடம்

லண்டன்: வெற்றியாளார் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் பெற்ற தோல்வியால் இந்தியா நல்ல பாடம் கற்றுக்கொண்டது என்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி (படம்) கூறியுள்ளார். ஏற்கெனவே தகுதிச் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்த இந்திய அணியை பந்துவீச்சு, பந்தடிப்பு, களக்காப்பு என அனைத்து பிரிவுகளில் பாகிஸ் தான் அணி துவம்சம் செய்தது. பாகிஸ்தான் அணிக்குப் பாராட்டு பாகிஸ்தான் அணி வீரர்களின் திறமைக்குக் கிடைத்த வெற்றி இது என்று இந்திய அணியின் அணித்தலைவர் கோஹ்லி பின்பு செய்தியாளர்களிடம் கூறினார். பாகிஸ்தான் வீரர்களுக்கும், அந்நாட்டு ரசிகர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டதாகவும் கோஹ்லி கூறினார்.

இந்த வெற்றி பாகிஸ்தான் வீரர்களின் திறமைக்குக் கிடைத்த வெற்றி என்றும், யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் அவர் தெரிவித்தார். “இன்னும் கூடுதலாக விக் கெட்டுகளைக் கைப்பற்றியிருக் கலாம் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார்கள். எனினும் சதம் அடித்த ஃபக்கார் ஜமான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவருடைய ஆட்டம் 80% ஆபத்தானதாக அமைந்தது. ஆனால் நடந்தவை அனைத்தும அவருக்குச் சாதகமாக அமைந்துவிட்டது,” என்றார் அவர். “நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்த முடிவில் தவறு எதுவுமில்லை .இன்றைய தினம் இந்திய அணிக்கான தினம் இல்லை,” என்றும் அவர் கூறினார்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சுதிர்மான் கிண்ணப் பூப்பந்துப் போட்டியின் ஆண் களுக்கான இரட்டையர் பிரிவில் சீனாவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி (இடது), சட்விக்சாய் ராஜ் ரன்கிரெட்டி தோல்வி அடைந்தனர். படம்: ஏஎஃப்பி

23 May 2019

சீனாவிடம் தோற்று வெளியேறிய இந்தியா

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து

23 May 2019

கோமதியின் தங்கப் பதக்கம் பறிபோகும் அபாயம்