குத்துச்சண்டை: பேக்கியோ வீழ்ந்தார்

பிரிஸ்பன்: உலகக் குத்துச்சண்டை போட்டியின் ‘வால்டர்வேட்’ பிரிவின் நடப்பு வெற்றியாளரான பிலிப்பீன்ஸின் மேனி பேக்கி யோவை வீழத்தியுள்ளார் முன் னாள் பள்ளி ஆசிரியரான ஜெஃப் ஹோஃப். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது ஜெஃப் ஹோஃப்புக்கும் 38 வயது பேக்கியோவுக்கும் இடையிலான குத்துச்சண்டை போட்டி நேற்று பிரிஸ்பனில் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஒருவரையொருவர் சரமாரியாகக் குத்தியதால் இருவருக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், இவரும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து போராடி னர். இறுதியில், ஹோஃப் வெற்றி பெற்றதாகப் போட்டியின் மூன்று நீதிபதிகளும் ஏகமனதாக முடிவெடுத்தனர். 117=111, 115=113, 115=113 என்ற புள்ளிகள் கணக்கில் ஹோஃப் வாகை சூடினார். “இது நீதிபதிகள் எடுத்த முடிவு. அதை நான் மதிக்கிறேன்,” என்று பேக்கியோ தெரிவித்தார். தாம் களமிறங்கியுள்ள 18 போட்டிகளில் 17 போட்டிகளில் ஹோஃப் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது.

ஜெஃப் ஹோஃப்புக்கும் மேனி பேக்கியோவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. பத்து சுற்றுகளுக்குப் பிறகு புள்ளிகள் கணக்கில் ஹோஃப் வெற்றி பெற்று வெற்றியாளர் பட்டத்தைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்றைய ஆட்டத்தில் ஆர்சனலுக்கு எதிராக கோல் போடும் நீல் மெளபே (இடமிருந்து மூன்றாவது, கறுப்பு சீருடையில்). படம்: இபிஏ

07 Dec 2019

ஆர்சனலுக்கு அடி மேல் அடி

(இடமிருந்து வலம்) வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்கப்பூரின் குவா செங் வென், தங்கம் வென்ற சிங்கப்பூர் நட்சத்திரம் ஜோசஃப் ஸ்கூலிங், வெண்கலம் வென்ற வியட்னாமின் பால் லீ ஙவேன். படம்: இபிஏ

07 Dec 2019

தங்கத்தைத் தக்கவைத்த ஸ்கூலிங்: ஒலிம்பிக்கில் இடம்

லிப்பீன்ஸில் நடைபெற்று வரும் 30வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வாள்சண்டையில் சிங்கப்பூர் அணி நேற்று தங்கம் வென்றது. படம்: எஸ்டி

07 Dec 2019

வாள்சண்டை, கோல்ஃப்பில் தங்கம்