இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி

பிரிஸ்டல்: பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்குப் போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. பிரிஸ்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் மூன்று முறை கிண்ணம் ஏந்தியுள்ள இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவுடன் மோதியது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த தென்னாப் பிரிக்காவுக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை.

லிசெல் லீ 7 ஓட்டங்களுடனும் திரிஷா ஷெட்டி 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர், ஜோடி சேர்ந்த லாரா வோல்வர்த், மிக்னன் டு பிரீஸ் இருவரும் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ஆனாலும் இங்கிலாந்தின் பந்துவீச்சை தென்னாப்பிரிக்க அணியால் சமாளிக்க முடியாமல் போனது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் களில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளுக்கு 218 ஓட்டங் கள் எடுத்தது. வோல்வர்த் (66 ஓட்டங்கள்), மிக்னன் டு பிரீஸ் (ஆட்டமிழக் காமல் 76 ஓட்டங்கள்), அரைசதம் அடித்தனர். அணித் தலைவர் வான் நீகெர்க் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்காவின் திரிஷா ஷெட்டியை (இடது) ‘ரன் அவுட்’ முறையில் ஆட்டமிழக்கச் செய்த இங்கிலாந்தின் நெட்டேலி ஸ்கைவர் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபடும் பங்ளாதேஷ் அணி வீரர்கள். படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

இளஞ்சிவப்பு பந்தில் பயிற்சி செய்யும் இந்திய அணி வீரர்கள்

சுவிட்சர்லாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற காற்பந்துப் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யர்கன் கிளோப். படம்: இபிஏ

13 Nov 2019

யர்கன்: எனக்கு நெருக்கடி இல்லை

பங்ளாதேஷ் அணிக்கு எதிரான 3வது டி20 ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியுடன் கைகுலுக்கும் ரோகித் சர்மா (இடது). படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

ரோகித்: எல்லா புகழும் பந்து வீச்சாளர்களுக்கே