சிங்கப்பூரில் ரொனால்டோ

உலகின் முன்னணி காற்பந்து ஆட்டக்காரரும் ரியால் மட்ரிட் குழுவிற்காக விளையாடி வருபவருமான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருநாள் பயணமாக இன்று சிங்கப்பூர் வருகிறார். நைக்கி, டேக் ஹூயர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள 32 வயது ரொனால்டோ, இன்னும் ஒரு முக்கிய விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்காக இங்கு வருகிறார். அவருக்கு சிங்கப்பூர் செல்வந்தரும் வெலன்சியா காற்பந்துக் குழுவின் உரிமையாளருமான திரு பீட்டர் லிம் இன்றிரவு சிறப்பு விருந்து அளித்துக் கௌரவிக்கவுள்ளார்.

Loading...
Load next