செல்சியில் மொராட்டா

லண்டன்: ஸ்பானிய காற்பந்து வீரரான 24 வயது அல்வேரோ மொராட்டாவை (படம்) தன்பக்கம் இழுத்துவிட்டது இங்கிலாந்தின் செல்சி காற்பந்துக் குழு. அவருக்காக செல்சி குழு 80 மில்லியன் யூரோவை (S$126 மி.) ரியால் மட்ரிட் குழுவிற்கு வழங்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படு கிறது. இதையடுத்து, இப்போது அமெரிக்காவில் பயிற்சியில் ஈடு பட்டு வரும் ரியால் குழுவிலிருந்து மொராட்டா கூடிய விரைவில் வெளியேறுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது. தன்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள செல்சி நிர்வாகி அன்டோனியோ கோன்டேவின் கீழ் விளையாட ஆர்வமாக இருப் பதாக மொராட்டா கூறியுள்ளார். முன்னதாக, வாரத்துக்கு 150,000 பவுண்டு ஊதியம் என்ற அடிப்படையில் மொராட்டாவை ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்ய செல்சி முன்வந்துள்ளது என்று கடந்த வாரம் பிரிட்டிஷ் ஊடகங்களில் செய்தி வெளி யானது.

கடந்த பருவத்தில் ரியால் குழுவிற்காக 43 போட்டிகளில் விளையாடிய தாக்குதல் ஆட்டக் காரரான மொராட்டா 20 கோல் களையும் அடித்தார். யுவென்டஸ் காற்பந்துக் குழு வின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து 2014ல் அன்டோனியோ கோன்டே விலகிய சில நாட்களில் அக்குழுவுடன் இணைந்தார் மொராட்டா. ஆனாலும், திரும்ப வாங்கும் ஒப்பந்த அம்சத்தின்கீழ் ஈராண்டுகளுக்குப்பின் அவரை மீண்டும் ரியால் குழுவே வாங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மீண்டும் அணிக்குத் திரும்பி சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிறப்பான தருணம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா