சாதிக்கத் தயாராகும் சாலா

குரோன்ஸி: முகம்மது சாலா. இவர் முன்னணி இங்கிலிஷ் காற்பந்துக் குழுவான லிவர்பூலின் நம்பிக்கை நட்சத்திரம் மட்டுமல்ல; உலகக் கிண்ணப் போட்டியில் எகிப்து அணியின் ஆயுதமும் இவர்தான். இருந்தாலும், உருகுவே அணிக்கு எதிரான இன்றைய 'ஏ' பிரிவு ஆட் டத்தில் சாலா விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை. சென்ற மாதம் நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் பந்தைத் தட்டிப் பறிக்க முற்பட்டபோது ரியால் மட்ரிட் குழுவின் செர்ஜியோ ராமோசும் சாலாவும் மோதிக்கொண்டனர். இதில் சாலாவின் தோள்பட்டையில் பலத்த அடிபட்டது. எனவே, மைதானத்தில் இருந்து அவர் வெளியேற நேர்ந்தது.

காயத்தின் வீரியம் சற்று அதிகமாக இருந்ததால் உலகக் கிண்ணப் போட்டி களில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ரஷ்யா வந்தடைந்த உலகக் கிண்ணத்திற்கான எகிப்து அணியில் சாலாவும் இருந்தார். ஆயினும், சாலா உலகக் கிண்ண பிரிவு ஆட்டங்களில் சாலா விளை யாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த மாதம் ரியால் மட்ரிட் குழுவிற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியின்போது காயமடைந்து வெளியேறிய லிவர்பூல் குழுவின் எகிப்து ஆட்டக்காரர் முகம்மது சாலா (இடது) பூரண குணமடைந்து பயிற்சிக்குத் திரும்பியிருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!