மெஸ்ஸி தடுமாற்றம்; ரசிகர்கள் ஏமாற்றம்

மாஸ்கோ: உலகக் கிண்ண ஆட் டங்களில் அவ்வப்போது அதிசயங் கள் நிகழ்வது உண்டு. உலகின் பெரிய அணி உலகின் சிறிய அணியை வெல்ல முடியாமல் திணறிய அதிசயம் நேற்று முன் தினம் 'டி' பிரிவில் அர்ஜெண்டினா =ஐஸ்லாந்து மோதலின்போது நடந்தது. அர்ஜெண்டினா தமது முதல் ஆட்டத்தில் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தும் என்று பெரிதும் எதிர்பார்த்த ரசிகர் களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும், உலக அரங்கில் நட் சத்திர ஆட்டக்காரராக ஜொலிக் கும் லயனல் மெஸ்ஸி மிகவும் எளிதான பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடிக்கத் தவறினார்.

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் செர்ஜியோ அகுவேரோ ஒரு கோல் அடித்தார். பதிலடியாக அடுத்த நான்காவது நிமிடத்தில் அதாவது ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் ஆல்ஃபிரட் பின்பகாசன் கோல் அடித்தார். இதனால் இரு அணி களும் 1-=1 என சமநிலையில் இருந்தபோது வெற்றி கோலைப் போடுவார் என்று மெஸ்ஸி மீது அபார நம்பிக்கை வைத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், 64வது நிமி மெஸ்ஸி தடுமாற்றம்; ரசிகர்கள் ஏமாற்றம் அறிமுகத்திலேயே அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் டத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பறந்த பந்து நேராக எதிரணியின் கோல் காப்பாளர் ஹேன்னஸ் ஹால்டர்சன் கையில் சரணடைந்தது.

ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் மெஸ்ஸியின் வெற்றி கோலைத் தடுத்த ஐஸ்லாந்து கோல் காப்பாளர் ஹேன்னஸ் ஹால்டர்சன். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!