செல்சி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது

லண்டன்: லீக் கிண்ணக் காற்பந்து அரையிறுதிச் சுற்றில் செல்சி குழு பெனால்டி வாய்ப்புகளில் டோட்டன் ஹம் ஹாட்ஸ்பர் குழுவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இக்குழுக்களுக்கு இடையே வெம்பிளி விளையாட்டரங்கில் நடந்த அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், அரையிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டம் செல்சியின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை நடைபெற்றது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் கோலடித்து செல்சிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் பிரான்சின் இங்கோலோ கோன்டே. கோல் கட்டத்திற்கு வெளியில் இருந்து அவர் உதைத்த பந்து எதிரணி ஆட்டக்காரர்கள் மூவரின் கால் களுக்குள் புகுந்து வலைக்குள் சென்றது. செல்சியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஈடன் ஹசார்ட் 38வது நிமிடத்தில் போட்ட கோல் மூலம் செல்சியின் முன்னிலை இரட்டிப்பானது. இருப்பினும், பிற்பாதி ஆட்டம் தொடங்கி ஐந்து நிமிடங்களில் ஆட்டம் சமனுக்கு வந்தது. செல்சி ஆட்டக்காரர்கள் இருவர் தம்மைத் தடுக்க முயன்றபோதும் அதையும் மீறி தலையால் முட்டி அருமையான கோலை அடித்தார் ஸ்பர்சின் ஃபெர்னாண்டோ லோரென்டே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!