தொடரைக் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் மகளிர்

வெலிங்டன்: ஐசிசி பெண்கள் வெற்றியாளர் கிண்ணத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது. 
பெண்கள் ஒருநாள் கிரிக் கெட்டில் வெற்றியாளர் கிண்ண தொடரை ஐசிசி அறிமுகப்படுத் தியுள்ளது. இதன்படி ஒவ்வோர் அணியும் மற்ற நாடுகளுக்குச் சென்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும். 
அதன்படி தற்போது இந்தியப் பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளை யாடுவதற்காக நியூசிலாந்து சென் றுள்ளது.
முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. 
பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் மிதலி ராஜ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 
அதன்படி முதலில் பந்தடித்த நியூசிலாந்து இந்திய வீராங் கனைகளின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 161 ஓட்டங்களில் சுருண்டது.
கோஸ்வாமி 3 விக்கெட்டுகளும் ஏக்தா பிஸ்ட், தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
பின்னர் 162 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. 
ஜெர்மையா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாகக் களம் இறங்கினார்கள். ரோட்ரிக்ஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா 8 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.
இந்தியா 35.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 எனக் கைப்பற்றி உள்ளது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி