தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் 

லாகூர்: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இரண்டாவது போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றியடைந்துள்ளது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் தொடரைக் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பந்தடித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் 133 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர். 
இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் பந்தடித்தது. பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டோட்டின் பந்தை எதிர்கொண்டார். நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் இமாலய சிக்சர்களை விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் 18 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தானின் அலியா ரியாஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் இராம் ஜாவித் ஓர் ஓட்டம் எடுத்தார். அடுத்த பந்தில் நிடா தார் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், இளம் ஆல்ரவுண்டர் சேம் கரன் என இருவரை ஒரே ஓவரில் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நேப்பாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிசானேவை (இடது) பாராட்டி மகிழும் டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

பழிதீர்க்கப்பட்ட பஞ்சாப்

இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே இந்தப் பருவத்தின் இத்தாலிய லீக் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் யுவென்டஸ் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள் (இடமிருந்து) யுவான் குவட்ரடோ, பிளேஸ் மட்விடி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்ரி கேன். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

ரொனால்டோ வரலாற்றுச் சாதனை