கவாஸ்கர்: தினேஷ் கார்த்திக் முக்கியம் 

மும்பை: உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் ஆஸ்திரேலியத் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். டி20 போட்டியில் இடம்பெற்ற அவர், ஒருநாள் போட்டியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சிதான். ஆஸ்திரேலியத் தொடரில் நீக்கப் பட்டதால் அவர் உலகக் கிண்ணத் திலும் இடம்பெறும் வாய்ப்பு குறைவே. இந்த நிலையில் உலகக் கிண்ண அணியில் தினேஷ் கார்த்திக் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கவாஸ்கர் தெரிவித்துள் ளார். தொடக்க ஆட்டக்காரராக தினேஷ் கார்த்திக்கை களம் இறக்கலாம். உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் குறித்து எனக்கு ஒரு கண்ணோட்டம் உள்ளது. எனது கணிப்பில் 13 வீரர்களுக்கு நிச்ச யம் இடம் கிடைக்கும். அதில் தவான், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, அம்பதி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், பும்ரா, முகம்மது‌ ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு உண்டு. மற்ற வகையில் ராகுல், ரகானே, ரிஷப் பன்ட் ஆகியோரைக் காட்டிலும் உலகக் கிண்ணப் போட்டிக்கு தினேஷ் கார்த்திக் தேவை. அணியில் எப்போதும் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண் டும். தொடக்க வீரராக தினேஷ் கார்த்திக்கை களம் இறக்கும் போது நல்ல முடிவு கிடைக்கும். டெஸ்ட்டில் களமிறங்கிய அனுபவம் இருப்பதால் அவரால் ஒரு நாள் போட்டியில் மிளிர முடியும்,” என்றார் கவாஸ்கர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி