டி20: ஆப்கானிஸ்தான் உலக சாதனை

டேராடூன்: இந்தியாவின் டேராடூன் நகரில் நடை பெறும் டி20 கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போட் டியில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை புரிந்தது.
இதற்கு முன்பு, 2016 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஆஸ் திரேலிய அணி எடுத்த 263 ஓட்டங்கள் (3 விக் கெட் இழப்புக்கு) என்ற சாத னையை ஆப்கானிஸ்தான் முறியடித்துள்ளது.
ஆப்கன் அணியின் ஹஸ்ரதுல்லா ஜஜாய் 167 ஓட்டங்கள் குவித்து ஆட்ட மிழக்காமல் இருந்தார்.
கடந்த ஆண்டு ஸிம் பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் ஃபின்ச் டி20 அனைத்துலக சாதனையை விட ஹஸ்ரதுல்லா ஐந்து ஓட்டங்களை மட்டுமே குறைவாக எடுத்திருக்கி றார்.
மேலும் டி20 போட்டியில் ஒரு ஜோடி அதிகபட்சமாக 236 ஓட்டங்கள் என்ற சாதனை படைக்கவும் ஆப் கன் அணிக்கு அவர் உத வினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விராத் கோஹ்லி=ஏபி டி வில்லியர்ஸ் இணை எடுத்த 229 ஓட்டங்களை விட இவர்கள் ஏழு ஓட் டங்கள் கூடுதலாக எடுத் துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, அனைத் துலக டி20 போட்டிகளில் ஓர் இணை அடித்த அதிக பட்ச ஓட்டங்கள் 223. 
கடந்த ஜூலை மாதம் ஸிம்பாப்வேக்கு எதி ராக ஆஸ்திரேலிய அணி யின் ஃபின்ச் மற்றும் ஆர்கி ஷார்ட் இணை இந்த ஓட் டங்களை எடுத்தது.
ஹஸ்ரதுல்லா ஜஜாய், 62 பந்துகளில் 162 ஓட் டங்களை விளாசினார். அதில், 16 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும்.
அவருடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய உஸ்மான் கனி 73 ஓட்டங்கள் எடுத்தார். ஆப் கானிஸ்தான் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் அயர்லாந்து அணி மண்ணைக் கவ்வியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது