அனில் கும்ளேவிற்கு மீண்டும் பதவி

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பயிற்றுவிப்பாளருமான அனில் கும்ளே அனைத்துலக கிரிக்கெட் மன்ற ‘கிரிக்கெட் குழு’வின் தலைவராக மறுநியமனம் செய்யப் பட்டுள்ளார். அடுத்த மூன்றாண்டுகளுக்கு அவர் அப்பதவியில் நீடிப்பார். 2012 அக்டோபரில் முதன்முதலாக அவர் அந்தப் பொறுப்பை ஏற்றார்.  டெஸ்ட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட்டுகளை (619) வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய அவர், 2016 ஜூனில் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆயினும், அணித் தலைவர் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டிலேயே அந்தப் பதவியிலிருந்து விலகினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு