நெய்மாருக்குக் குறிவைக்கும் ரியால்

நெய்மாருக்குக் குறிவைக்கும் ரியால்

1 mins read

மட்ரிட்: பிரான்சின் பிஎஸ்ஜி காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வரும் நட்சத்திர பிரேசில் வீரர் நெய்மாரைத் தன்பக்கம் இழுக்க ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழு முயன்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெய்மாருக்காக 350 மில்லியன் யூரோ (S$535 மி.) விலைகொடுக்கவும் அக்குழு தயாராகவுள்ளதாம். பிஎஸ்ஜி சார்பில் விளையாடி வரும் பிரெஞ்சு வீரர் கிலியன் எம்பாப்பே தமது நாட்டைவிட்டு வெளியேற விரும்பாததால் ரியால் குழு நெய்மாருக்குக் குறிவைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.