தடுத்து நிறுத்தப்பட்ட மான்செஸ்டர் யுனைடெட்

லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட்டின் இடைக்கால நிர்வாகி யாக முன்னாள் வீரர் ஒலே குனார் சோல்சியார் பொறுப் பேற்றதை அடுத்து, நேற்று  அதிகாலை நடைபெற்ற ஆட்டத் தில்தான் அக்குழு இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது. ஆர்சனலை எதிர்கொண்ட யுனைடெட் 2=0 எனும் கோல் கணக்கில் தோற்றது. 
இந்த ஆட்டம் ஆர்சனலின் விளையாட்டரங்கத்தில் நடை பெற்றது.
ஆட்டத்தின் 12வது நிமிடத் தில் ஸாக்கா அனுப்பிய பந்து வளைந்து சென்று வலையைத் தொட, ஆர்சனல் முன்னிலையைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, இரு குழுக்களும் மாறி மாறி கோல் வேட்டையில் இறங்கின. யுனைடெட் எவ்வளவு முயன்றும் அதனால் கோல் போட முடியாமல் போனது.
அதற்கு ஆர்சனலின் தற்காப்பு  விட்டுக்கொடுக்காமல் ஆடியதே முக்கிய காரணம்.
அதுமட்டுமல்லாது, யுனைடெட் டுக்கு கோல் போட கிடைத்த பொன்னான வாய்ப்புகளை ஆர்சனல் கோல்காப்பாளர் முறியடித்தார்.
மேலும் அதிர்ஷ்டமும் யுனை டெட்டுக்குக் கைகொடுக்க வில்லை. யுனைடெட்டின் இரண்டு கோல் முயற்சிகள் நூலிழையில் இலக்கைத் தவறின. பந்து இருமுறை கோல் கம்பம் மீது பட்டு வெளியானது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில், ஆட்டம் முடிய ஏறத்தாழ 21 நிமிடங்கள் எஞ்சி இருந்த வேளையில், ஆர்சன லுக்குப் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதை கோலாக்கி தமது குழுவின் வெற்றியை உறுதி செய்தார் ஒபமாயாங்.
லீக் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் ஆர்சனல் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவை  நெருங்கியுள்ளது.
ஸ்பர்ஸ் குழுவைவிட அது வெறும் ஒரு புள்ளி குறைவாகப் பெற்றுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது