அரையிறுதியில் மேன்சிட்டி

லண்டன்: தோல்வியின் விளிம்பில் இருந்தபோதும் மனந் தளராது விளையாடி இறுதியில் வெற்றி பெற்ற மான்செஸ்டர் சிட்டி, இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டி யின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
சுவான்சீ சிட்டியின் லிபர்ட்டி விளையாட்டரங்கத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சுவான்சீ சிட்டியை 3-2 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது சிட்டி.
ஆட்டத்தின் 20வது நிமிடத் தில் பெனால்டி வாய்ப்பு மூலம் சுவான்சீ கோல் போட்டு முன்னிலை வகித்தது.
29வது நிமிடத்தில் சுவான்சீ அதன் இரண்டாவது கோலைப் போட்டது. இடைவேளையின் போது சுவான்சீ 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில் நிலை மை மாறியது. ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் சிட்டியின் முதல் கோலைப் போட்டார் பெர்னாடோ சில்வா.
சில நிமிடங்கள் கழித்து, சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்கி ஆட்டத்தைச் சமன் செய்தார் செர்ஜியோ அகுவேரோ.
ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் சிட்டியின் வெற்றி கோல் புகுந்தது.
பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பினார் அகுவேரோ.