யுனைடெட்டை வெளியேற்றிய உல்வ்ஸ்

உல்வர்ஹேம்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு உல்வ்ஸ் என்று அழைக்கப்படும் உல்வர்ஹேம்டன் வாண்டரஸ்  தகுதி பெற்றுள்ளது.
எஃப்ஏ கிண்ண அரையிறுதிச் சுற்றுக்கு 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு உல்வ்ஸ் முன்னேறியிருப்பது இப்போதுதான் முதல்முறை.
நேற்று அதிகாலை  நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மான் செஸ்டர் யுனைடெட் குழுவை அது 2=1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
முற்பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது.
பிற்பாதி ஆட்டத்தில் உல்வஸ் முனைப்புடன் தாக்குதல்களை நடத்தியது.
அதன் முயற்சிகளுக்கு ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் பலன் கிட்டியது.
உல்வ்ஸ் குழுவின் மெக்சிகோ தாக்குதல் ஆட்டக்காரர் ராவுல் ஜிமெனெஸ் அனுப்பிய பந்து யுனைடெட் கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தொட்டது. அவரிடமிருந்து பந்தைப் பறிக்க யுனைடெட்டின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. அவர்களை உதறித் தள்ளிவிட்டு பந்தை வலைக்குள் சேர்த்தார் ஜிமெனேஸ்.
ஆட்டத்தைச் சமன் செய்ய வேண்டும் என்று யுனைடெட் கொண்டிருந்த கனவை அடுத்த ஆறு நிமிடங்களில் உல்வ்ஸ் தகர்த்தெறிந்தது.