சுடச் சுடச் செய்திகள்

லீக் பட்டியலில் மென்செஸ்டர் சிட்டி முன்னிலை

மென்செஸ்டர் யுனைட்டட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மென்செஸ்டர் சிட்டி, 89 புள்ளிகளைப் பெற்று தற்போது பிரிமியர் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. மென்செஸ்டர் சிட்டிக்கு அடுத்தபடியாக லிவர்பூல் அணி பட்டியலின் இரண்டாவது நிலையில் உள்ளது. 

வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் சொந்தத் திடலிலேயே ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்திய மென்செஸ்டர் யுனைட்டட், தற்போது பட்டியலின் ஆறாம் நிலையில் உள்ளது.

பலவாறு முயன்றபோதும் அரையாட்டத்தின் முடிவில் எந்த அணியும் கோலைப் புகுத்தவில்லை. இருந்தபோதும் பெர்னாடோ சில்வா 54ஆம் நிமிடத்திலும் லெராய் சனே 66ஆம் நிமிடத்திலும் மென்செஸ்டர் சிட்டிக்கு ஆளுக்கு ஒரு கோலைப் புகுத்தினர். 

மென்செஸ்டர் சிட்டி இதுபோலவே கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் மென்செஸ்டர் யுனைட்டட் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சிறப்பாக ஆடியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon