வெற்றிக் களிப்பில் லிவர்பூல் ரசிகர்கள் மீண்டும் சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றதன் மூலம் ஆறாவது முறையாக கிண்ணத்தைக் கைப் பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது லிவர்பூல் குழு. அதனால் அக்குழுவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதற்கு மு

வெற்றிக் களிப்பில் லிவர்பூல் ரசிகர்கள்

மீண்டும் சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றதன் மூலம் ஆறாவது முறையாக கிண்ணத்தைக் கைப் பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது லிவர்பூல் குழு. அதனால் அக்குழுவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் விளையாடிய லிவர்பூல் ரியால் மட்ரிட் குழுவிடம் தோல்வி கண்டது.

இம்முறை அந்த தோல்வியை ஈடுகட்ட நினைக்கும் லிவர்பூல்.

இந்த வெற்றியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று பல லிவர்பூல் ரசிகர்கள் கூறினர்.

“மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கின்றேன். கடைசி வரைக்கும் விட்டுக்கொடுக் காமல் வெற்றியை இலக்காகக் கொண்டு லிவர்பூல் செயல்பட்டது என்றார் வாடிக்கையாளர் சேவை நிர்வாகியான நிர்மலா,38. 

“இந்த வெற்றியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஆட்டம் முடியும்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிரம்பி யிருந்தது. என் குடும்பமே ஆட்டத்தைப் பார்த்தது,” என்றார் 33 வயது முகம்மது ஃபைசால்.

மீண்டும் ஒரு பெரிய மலையைக் கடந்துள்ளது லிவர்பூல் என்றார் எம் முருகன்.

“இந்த வெற்றிக்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று நிர்வாகி கிளோப். மற்றொன்று ஆண்ஃபீல்டு. லிவர்பூலின் சொந்த அரங்கில் அதன் சொந்த ரசிகர்களின் உற்சாகக் கரகோஷம் எந்த மலையையும் தாண்ட உதவும்,” என்றார் டௌன்டவுன் லைன் எம்ஆர்டி நிலையம் ஒன்றில் நிர்வாகியாகப் பணியாற்றும் 43 வயது எம்.முருகன்.

லிவர்பூலின் ரசிகர்களே அக்குழுவின் மிகப் பெரிய பலம் என்றார் 26 வயது தினேஷ் நடராஜன்.

“காற்பந்து வாழ்வின் மிகப் பெரிய ஆசான். அது எனக்கு எவ்வளவோ கற்றுத் தந்துள்ளது. ஒரு காரியத்தில் முனைப்புடன் இறங்கினால், விடாமுயற்சியுடன் செயல்பட்டால், அன்புக்குரியவர் களின் அன்பும் ஆதரவும் இருக்கும் பட்சத்தில் வழியில் வரும் அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு வெற்றியைப் பெறலாம். நான் அதை அதிகம் நம்புகிறேன். லிவர்பூல் குழுவும் அப்படியே செய்துள்ளது,” என்றார் சட்டத்துறையில் பணிபுரியும் தினேஷ்.

இந்த வெற்றியை எதிர்பார்க் கவில்லை என்றார் அரசு ஊழியரான சந்தியா தேவி,33. 

“இரு முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாமல் களம் இறங்கிய லிவர்பூலுக்கு வாய்ப்புகள் மிகவும் அரிதாக இருந்தன. ஆனால் இந்த வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. ஒரு குழுவாக ஒற்றுமையுடன், மனோதிடத் துடன், முனைப்புடன் விளையாடி யது லிவர்பூல். வெற்றியும் பெற்றது. கண்டிப்பாக இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றுவோம்,” என்றார் சந்தியா.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon