இந்திய ஊக்க மருந்து ஆய்வு மையத்திற்குத் தடை

புதுடெல்லி: இந்தியாவில் தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையம் அனைத்துலகத் தரத்துக்கு ஈடான வகையில் இல்லாததால் அதன் அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து அனைத்துலக ஊக்க

மருந்து தடுப்பு அமைப்பான ‘வாடா’ அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் இனிமேல் வீரர், வீராங்கனைகளின் சிறுநீர், ரத்த மாதிரிகளை இந்தியாவில் ஆய்வு செய்ய முடியாது. பேங்காக் அல்லது வேறு வெளிநாடுகளில் மட்டுமே பரிசோதிக்க முடியும் என்பதால், அதன் செலவு பன்மடங்கு உய

ரும்.

ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 11 மாதங்களே இருக்கும் நிலையில் இதுபோன்ற தடை உத்தரவு மிகப்பெரிய பின்னடைவாகும்.