கோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து

மட்ரிட்: யூரோ 2020 தகுதிச் சுற்றில் நேற்று அதிகாலை நடந்த காற்பந்து ஆட்டம் ஒன்றில் ருமேனியாவை 5-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் அபார வெற்றி கண்டது.

அடுத்த ஆண்டு நடைபெறும் இறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட ஸ்பெயின், கடந்த வெள்ளிக்கிழமை மால்ட்டா குழுவை 7-0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது.

இதன் மூலம் ‘எஃப்’ பிரிவில் முதலிடத்தை ஸ்பெயின் வலுவாக்கிக்கொண்டது.

எனினும், ஸ்பெயின் ஆட்டக்காரர்களிடையே கோல் வேட்கை சற்றும் குறையாத நிலையில், ருமேனியா உடனான ஆட்டத்திலும் அவர்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். அதற்குப் பலனாக கோல்கள் விழுந்தன.

தகுதிச் சுற்றிலிருந்து இறுதிப் போட்டிக்கு ருமேனியாவால் நேரடியாக தகுதி பெற முடியாவிட்டாலும், நேஷன்ஸ் லீக் போட்டி மூலம் ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு அது தகுதி பெறுவது உறுதி செய்யப்பட்டது.

ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் ஸ்பானிய வீரர் ஃபேபியன் ருயிஸ் போட்ட கோலால் ஸ்பெயின் முன்னணி வகித்தது.

அதையடுத்து ஆட்டத்தை சமன் செய்வதற்கான வாய்ப்பை ருமேனியா வீணடித்தது. அதன் பிறகு வந்தது ஸ்பெயினின் கோல் வேட்டை.

தகுதிச் சுற்றில் தான் விளையாடிய 10 ஆட்டங்களில் எதிலும் தோல்வியுறாத ஸ்பெயின் 26 புள்ளிகளைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

சுவீடன் குழு 21 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் உள்ளது.

ஸ்பானிய பயிற்றுவிப்பாளர் பதவி விலகுவதாக தகவல்

இதற்கிடையே, ஸ்பானிய குழு பயிற்றுவிப்பாளர் ராபர்ட் மொரினோ பதவியிலிருந்து வெளியேறவிருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகளை ஸ்பானிய ஊடகங்கள் வெளியிட்டன.

அக்குழுவின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் என்ரிக் அப்பதவியை மீண்டும் ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது மகளுக்கு நோய் முற்றியதால் லூயிஸ் என்ரிக் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியிருந்தார். கடந்த செப்டம்பரில் அவரது மகள் உயிரிழந்தார்.

ஆட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களுக்கு வழக்கமாக பேட்டியளிக்கும் மொரினோ, இம்முறை அதைத் தவிர்த்துக்கொண்டார். ருமேனியா உடனான ஆட்டம் முடிந்தவுடன் கண்ணீர் மல்க வீரர்களிடம் விடைபெற்றுக்கொண்டதாக ஸ்பானிய ஊடகங்கள் குறிப்பிட்டன.

இத்தாலி காட்டில் கோல் மழை

யூரோ தகுதிச் சுற்றில் நேற்று அதிகாலை நடந்த மற்றோர் ஆட்டத்தில் ஆர்மேனியாவை 9-1 எனும் கோல் கணக்கில் இத்தாலி வேட்டையாடியது. தொடர்ச்சியாக 11 அனைத்துலக ஆட்டங்களில் இத்தாலி வென்றுள்ளது.

இறுதிப் போட்டிற்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட இத்தாலி, ‘ஜே’ பிரிவில் அது விளையாடிய 10 ஆட்டங்களில் அனைத்திலும் வென்று அதிகபட்சம் 30 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

யூரோ தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற நட்புமுறை ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவை இத்தாலி தோற்கடித்திருந்தது. இத்தாலிய காற்பந்துக் குழுவின் 109 ஆண்டுகால வரலாற்றிலேயே தொடர்ச்சியாக இத்தனை ஆட்டங்களை அது வென்றிருப்பது இதுவே முதன்முறை.

யூரோ இறுதிப் போட்டிக்கு

சுவிட்சர்லாந்து தகுதி

யூரோ தகுதிச் சுற்றின் ‘டி’ பிரிவில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் ஜிப்ரல்ட்டார் குழுவை 6-1 எனும் கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வாகை சூடியது. அப்பிரிவில் 17 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டால் போதுமானது என்றாலும் சுவிஸ் வீரர்கள் மெத்தனமாக இருந்துவிடவில்லை.

இதற்கிடையே, நேற்று நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் டென்மார்க், அயர்லாந்து குழுக்கள் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன. ‘டி’ பிரிவில் இரண்டாம் நிலையில் உள்ள டென்மார்க், அடுத்த ஆண்டின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

அக்குழுவைவிட ஒரு புள்ளி குறைவாக பெற்று மூன்றாம் நிலையில் உள்ள அயர்லாந்து, ‘பிளே ஆஃப்’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை ஒரு மாத காலத்–திற்கு யூரோ இறு–திப் போட்டி நடக்–கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!