விதிமுறை மீறல்: காற்பந்து வீரர்களின் பெயர்களை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது நேரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய சிங்கப்பூர் காற்பந்து வீரர்கள் 9 பேரின் பெயர்களை சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு காற்பந்து வீரர்களின் பெயர்களை வெளியிடுவது முறையல்ல என்று சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றத்தின் தலைமைச் செயலாளர் கிறிஸ் சான் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களின் திறன் குறித்த ஆய்வின்போது அவர், “முழுமையான விசாரணை முடிவதற்குள் வீரர்களின் பெயர்களை வெளியிடுவது முறையானதாக இருக்காது,” என்று அவர் எண்ணுவதாகக் கூறினார். வீரர்களின் பெயர்களை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் வெளியிட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

தென்கிழக்காசிய விளையாட்டின்போது நேரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய வீரர்கள் மீது சிங்கப்பூருக்குச் சென்றதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றம் டிசம்பர் 5ஆம் தேதி செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. அதற்கு மறுநாளே சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம், நேரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக ஆறு காற்பந்து வீரர்களின் பெயர்களை வெளியிட்டது.

நேரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக ஸர்ஃபான் ரோகைஸட், 2) ஜோ‌ஷுவா பெரேரா, 3) லயனல் டான், 4) கென்ஜி ருசிடி, 5) ஸுல்கர்னேன் சுஸ்லிமான், 6) தஜெலி சலாமட் ஆகியோர் பெயர்களை வெளியிட்ட காற்பந்துச்சங்கம், இந்த வீரர்கள் கடுமையான தடையை எதிர்நோக்கக்கூடும் என்றும் கூறியிருந்தது.

மேலும் மூன்று வீரர்களான ‌ஷா ‌ஷாஹிரான், ஹாமி சியாபின், சைஃபுல்லா அக்பர் ஆகிய காற்பந்து வீரர்களின் பெயர்களையும் சங்கம் குறிப்பிட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!