பார்சிலோனா நிர்வாகி நீக்கம்

பார்சிலோனா: ஸ்பானிய காற்பந்து லீக்கின் முன்னணி குழுவான பார்சிலோனாவின் நிர்வாகி பதவியில் இருந்து எர்னஸ்டே வல்வெர்டே, 55, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

வல்வெர்டேவின் பயிற்சியின்கீழ் தொடர்ந்து இரு பருவங்களாக ஸ்பானிய லா லீகா பட்டத்தைக் கைப்பற்றிய பார்சிலோனா குழு, இப்பருவத்திலும் கோல் வித்தியாச அடிப்படையில் பட்டியலின் முதல் இடத்தில் இருக்கிறது.

ஆயினும், அக்குழு கடைசியாக விளையாடிய ஐந்து ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. 2003ல் லூயி வேன் ஹால் நீக்கப் பட்டதற்குப் பிறகு, ஒரு பருவத்தின் இடையிலேயே பதவிநீக்கம் செய்யப்பட்ட முதல் பார்சிலோனா நிர்வாகி வல்வெர்டேதான்.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் கடந்த இரு பருவங்களிலும் பார்சிலோனா இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறவில்லை. 2017-18ல் இத்தாலியின் ரோமா குழுவிடம் காலிறுதியிலும் 2018-19ல் இங்கிலாந்தின் லிவர்பூல் குழுவிடம் அரையிறுதியிலும் அக்குழு தோற்று வெளியேறியது. சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை பார்சிலோனா கடைசியாக 2015ல் கைப்பற்றியது.

இதனிடையே, அக்குழுவின் புதிய நிர்வாகியாக ரியால் பெட்டிஸ் குழுவின் முன்னாள் நிர்வாகி கீக்கே செட்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஜூன் 30 வரை நிர்வாகிப் பதவியில் நீடிக்க செட்டியன் ஒப்புக்கொண்டுள்ளார்.

“ஸ்பானிய காற்பந்தில் அனுபவமிக்க நிர்வாகிகளில் செட்டியனும் ஒருவர்,” என பார்சிலோனா குழு தெரிவித்தது.

கடந்த பருவத்தில் செட்டியனின் பெட்டிஸ் குழு, பார்சிலோனா குழுவை, அதன் சொந்த நூ காம்ப் அரங்கிலேயே வைத்து 4-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடக்கவுள்ள கிரனாடா குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் செட்டியனின் பயிற்சியின்கீழ் பார்சிலோனா முதல் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!